25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


.பாதாம் அல்வா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்:
பாதாம் - 1 கப்,
சர்க்கரை - 1 முதல் 1/4 கப்,
நெய் - 1/2 கப்,
காய்ச்சிய பால் - 1/4 கப்,
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,
குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊறவைத்தது) .
செய்முறை:
பாதாமை வெதுவெதுப்பான நீரில் 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய
பாதாமின் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் சேர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து, மிகவும் நைஸாக அல்லாமல் சற்று
கொரகொரப்பாக (ரவை பதத்திற்கு) அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், அரைத்த பாதாம் விழுதைச்
சேர்க்கவும். மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பாதாமில் உள்ள ஈரப்பதம் குறைந்ததும், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.
சர்க்கரை கரைந்து அல்வா இளகும்.
சர்க்கரை முழுமையாகக் கரைந்து அல்வா கெட்டியாக வரும் வரை மிதமான தீயில்
கிளறவும். மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாகச் சேர்க்கவும்.

அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், சுருண்டு திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து
இறக்கவும். சுவையான, நாவில் கரையும் மணமணக்கும் பாதாம் அல்வா தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News