குடமிளகாய் சட்னி.
தேவையான பொருட்கள்:
2 கப் குடமிளகாய் (நறுக்கினது) , 1/2 கப்தக்காளி,1/4 கப் சின்ன வெங்காயம்,2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்,
1டீ ஸ்பூன்கடுகு,2 ஸ்பூன்உ.பருப்பு , 3 ப.மிளகாய்2 சி.மிளகாய்,1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்,ருசிக்குகல் உப்பு,
2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்,1 கொத்து கறிவேப்பிலை.
செய்முறை:
கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், உ.பருப்பு, சி.மிளகாய், ப.மிளகாய் போட்டு வறுக்கவும்.பிறகு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கியதும், தக்காளி,குடமிளகாய், தேங்காய்போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும், உப்பு போட்டு, அடுப்பை நிறுத்தி விட்டு ஆற விடவும்.ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு அரைக்கவும்.
கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு,சி.மிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத் தூள் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
இப்போது, சுவையான, சுலபமான,* குடமிளகாய் சட்னி* தயார்.இது, தோசை, இட்லிக்கு,ஆப்ட்டாக இருக்கும்.
இது,உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.தோலில் ஏற்படும் வறட்சியை போக்கி,
தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது.
0
Leave a Reply