பன்னீர் கேப்ஸிகம் மசாலா.
தேவையான பொருட்கள்:
1 கப் பன்னீர்,1 வெங்காயம்,1.தக்காளி,2 பச்சை மிளகாய்,
1 பச்சை குடைமிளகாய்,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,
1/2 கப் கிரீம்,1 டேபிள் ஸ்பூன் பட்டர்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
1டீஸ்பூன் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,
தேவையான அளவுஉப்பு.
செய்முறை:
ஒரு கப் பன்னீரை எடுத்து கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம்மசாலாத்தூள்,உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டர் சேர்த்து உறுகியதும்,சீரகம்,பட்டை, பிரிஞ்சிஇலை,இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின்னர் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும்சேர்த்து கலக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, இரண்டுநிமிடங்கள் மூடி வைக்கவும்.ஓரளவு கெட்டியானதும், கலந்து இறக்கினால் பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார்.தயாரான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
இப்போது மிகவும் சுவையான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜி சப்பாத்தி, ரொட்டி, நாண்போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply