.ரஸ்க் அல்வா.
தேவையான பொருட்கள்:
ரஸ்க் - 10 முதல் 12 துண்டுகள் (டீ ரஸ்க்),
சர்க்கரை – முக்கால் கப் (அல்லது உங்கள் சுவைக்கேற்ப),
நெய் - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்,
பால் – அரைகப்,
தண்ணீர் – ஒன்றரை கப்,
முந்திரி மற்றும் திராட்சை - தேவையான அளவு,
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்,
செய்முறை:
ரஸ்க்கை மிக்ஸியில் சேர்த்து லேசாக அரைத்து தூளாக்கிக் கொள்ளவும் (ரொம்பவும்
நைசாக அரைக்க வேண்டாம்).
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக
வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க
வைக்கவும். (பாகு பதம் தேவையில்லை).
கொதிக்கும் சர்க்கரை பாகில் பொடித்து வைத்துள்ள ரஸ்க் தூளைச் சேர்த்து
கட்டியில்லாமல் கிளறவும்.
ரஸ்க் தண்ணீரை உறிஞ்சியதும், பால் மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து மிதமான
தீயில் கிளறவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், பளபளப்பாக சுருண்டு வரும். அப்போது ஏலக்காய் தூள்
மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் நாவில் கரையும் ரஸ்க் அல்வா
தயார்.
0
Leave a Reply