பலா விதை அல்வா.
தேவையான பொருட்கள்:
பலா விதை - 500 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 4 மேஜைகரண்டி
கேசரி பவுடர்,முந்திரி, திராட்சை,தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பலா விதைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்.வாணலியில் நெய் சூடானதும் மசித்த பலாவிதைகளை போட்டு வதக்கவும். பின் சர்க்கரை,கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும். அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்த முந்திரி,திராட்சை, நெய் கலந்து இறக்கவும்.சுவைமிக்க, 'பலா விதை அல்வா!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர். மாலை
நேரத்தில் பரிமாற ஏற்றது.
0
Leave a Reply