25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2026-2027 கல்வியாண்டுக்கான 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2026-2027 கல்வியாண்டுக்கான 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள்.

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2026-2027 கல்வியாண்டுக்கான 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ / மாணவியர்கள் முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை 08.04.2026 -ஆம் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு விடுதிக்கான ஆன்லைன் வாயிலான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள் 11.05.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும். முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கான நேரடி மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகின்ற 12.05.2026 அன்று காலை 7.00 மணியளவில் நடைபெற உள்ளது.

மாணவியர்களுக்கான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்திலும், மாணவ மாணவியர்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் AGB நீச்சல் குள வளாகம், வேளச்சேரியிலும், மாணவ மாணவியர்களுக்கான வில்வித்தை, சைக்கிளிங், இறகுப்பந்து, மேசைப்பந்து மற்றும் கனோயிங் (மாணவர்கள் மட்டும்), கையாக்கிங் (மாணவர்கள் மட்டும்) தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், செங்கல்பட்டிலும் 12.05.2026 அன்று காலை 7.00 மணி முதல் நடைபெற உள்ளது.  

நேரடி மாநில அளவிலான தேர்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆகவே பள்ளி மாணவ மாணவியர்கள் முதன்மை நிலை விளையாட்டு மைய தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *