தமிழ்நாட்டில் 97.17 விழுக்காடு பெற்று இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் ஒன்பதாவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் - ஏப்ரல் 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99 தேர்வு மையங்களில் 9,731 மாணவர்களும், 11,599 மாணவியர்களுமாக மொத்தம் 21,330 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
அதில் 08.05.2026 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் 9,297 மாணவர்களும், 11,430 மாணவியர்களும் என மொத்தம் 20,727 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 0.53 விழுக்காடு கூடுதலாக பெற்று 97.17 விழுக்காடு பெற்று இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் ஒன்பதாவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் அரசுப்பள்ளிகளில் 20. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 23 பதின்மப் பள்ளிகளில் 37 மொத்தமாக 80 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளது.வேதியியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணித பாடத்தில் 14 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 170 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 07 மாணவர்கள், தாவரவியல் பாடத்தில் 02 மாணவர்கள்,
கணினி பயன்பாடுகள் பாடத்தில் 80 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 52 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 23 மாணவர்கள், வரலாறு பாடத்தில் 40 மாணவர்கள், பொருளியல் பாடத்தில் 07 மாணவர்கள், வணிக கணிதம் பாடத்தில் 11 மாணவர்கள், பிரெஞ்ச் பாடத்தில் 07 மாணவர்கள், என மொத்தம் 423 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply