மக்கள், அரசாங்கம் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை களமாக ஆர்யாவின் 'அனந்தன் காடு'
.தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்திற்கு 'அனந்தன் காடு' என பெயரிட்டு முதல் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர். காட்டை பின்னணியாக கொண்டு மக்கள், அரசாங்கம் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை களமாக இருக்கும் என தெரிகிறது.'மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம்' ஆர்யா, இவற்றுடன் தனது 36வது படமாக ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்திலும் நடிக்கிறார். எம்புரான் பட கதாசிரியர் முரளி கோபி கதை எழுதி உள்ளார். ரெஜினா, நிகிலா விமல் நாயகி களாகவும் மலையாள, தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர்.
0
Leave a Reply