'தொடரும்' பட வரவேற்பால் நெகிழ்ச்கியடைந்த மோகன்லால்.
மோகன்லால் நடித்து வெளியான படம் 'தொடரும்.” ஷோபனா நாயகியாக நடித்துள்ளார்.இருவரும் நீண்ட இடை வெளிக்கு பிறகு இணைத் துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள மோகன்லால் “தொட ரும்” படத்திற்கான வரவேற்பால் நெகிழ்ச்கிய டைந்தேன். படத்தை கருணையுடன் ஏற்றதற்கு நன்றி. இந்த நன்றியுணர்வு என்னுடையது மட்டுமல்ல. இந்தப் பயணத் தில் என்னுடன் பயணித்து, ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் அன்பையும், முயற் சியையும், உணர்வையும் அளித்த ஒவ்வொருவருக்கும் இது சொந் தமானது' எனக் கூறியுள்ளார். 'தொடரும்'. கிரைம் திரில்லர் களத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூலில் உலகளவில் ரூ.100 கோடியை கடந்தது. இப்படத்திற்கு தமிழகத்திலும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதன் தமிழ் பதிப்பு தமிழகத்தில் மே 9ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply