பாவனா ரீஎன்ட்ரி
வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் மலையாள நடிகையான பாவனா தமிழில் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக கன்னடத்தில் மட்டும் நடித்து வரும் இவர் 14 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் ஜெயதேவ் இயக்கத்தில் 'தி டோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி நடித்துள்ளனர். ஹாரர் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இப்படம் இம்மாதம் வெளியாகிறது.
0
Leave a Reply