மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்முதியவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சிவந்திபட்டி கிராமத்தில் வருவாய்த்துறையின் மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை சுமார் 40000 -த்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கி இருக்கிறது.
மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மனுவை உடனடியாக பரிசீலனை செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், இன்று திருவில்லிபுத்தூர் வட்டம், சிவந்திபட்டி கிராமத்தில், வருவாய்த்துறையின் மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்நிகழ்வின் போது, சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply