வேர்க்கடலை சுண்டல்.
தேவையான பொருட்கள்-
2 கப் தோலுரிக்காத வேர்க்கடலை,
2மேஜை கரண்டி நல்லெண்ணை,
1 தேக்கரண்டி கடுகு,
சிட்டிகை பெருங்காயம்,
1 மேஜை கரண்டி உளுந்து,
4வர மிளகாய்,
1தேக்கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது,
1தேக்கரண்டி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,
½கப் கறிவேப்பிலை,
1 கப் பிரஷ் தேங்காய் துருவல்,
தேவையான உப்பு.
செய்முறை-
கொதிக்கும் நீரில் வேர்க்கடலையை30 நிமிடம் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்,. ஒரு விசில் போதும். குழைய வைக்காதீர்கள். வெந்த பின் வெளியே எடுத்து நீரை வடிக்கவும்.
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் கடுகு சேர்த்து, உளுந்து, வர மிளகாய் சேர்க்கவும். உளுந்து, பொன் நிறமானதும் ,இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து கிளற. தேங்காய் துருவல் சேர்க்கவும். நிறம் மாறும் வரை வதக்கவும்.
வேகவைத்து வடித்த வேர்க்கடலை சேர்த்து,4 நிமிடங்கள் கிளற,உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேர்க்கடலை
சுண்டல் தயார்.
0
Leave a Reply