சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல்.
'விருமாண்டி' படம் மூலம் கமல் இயக்கி, நடித்து பிரபலமானவர் அபிராமி, இவர்அளித்தபேட்டியில் 'விருமாண்டியில் நடித்தசமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கு இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந் தால் நன்றாக இருக்கும் என நினைத்து. கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் தந்தார். கமலிடமும் கடிதம் கேட்ட.தற்கு அவர் சினிமாவை விட்டு நீ போகக்கூடாது, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எனக் கூறி மறுத்தார். விருமாண்டி படம் முடிந்த பின் அந்த கல்லுாரியில் அட்மிஷன் கிடைத்து படிக்க சென்றுவிட்டேன்" என்றார்.
0
Leave a Reply