25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கருந்திட்டுக்கள்   உள்ள முகத்திற்கு 3  கிரீம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருந்திட்டுக்கள் உள்ள முகத்திற்கு 3 கிரீம்

முதலில் குங்கிலியம் 20 கிராம், நல்லெண்ணெய் 100ml எடுத்து கொள்ளுங்கள். குங்கிலியத்தை இடித்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் 100ml நல்லெண்ணெய் ஊற்றவும். பின் இடித்த குங்கிலியத்தை எண்ணெயில் சேருங்கள். குங்கிலியம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.. எண்ணெய் ஆறியதும் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தில் 100ml தண்ணீர் ஊற்றவும். பிறகு இந்த தண்ணீரில் வடிகட்டி வைத்து இருக்கும் எண்ணையை சேருங்கள். பின் இரண்டு பொருட்களும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இப்போ ஒரு கிரீம் போல கிடைத்துவிடும். இந்த கிரீமை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.-இந்த கிரீமை இரவு தூங்குவதற்கு முன்பு பிக்மென்டேஷன் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.


ஒரு கிண்ணத்தில் எலும்பிச்சை பழச்சாறு, பசும் பால் சேர்த்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸ் செய்யுங்கள்  உங்களது முகத்தை நன்றாக கழுவி கொள்ளுங்கள்.  முகத்தில் ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பின் கலந்து வைத்த கலவையை முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருங்கள். பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
 

அடுத்து பொடுதலை கீரையை கழுவி அரைத்து கொள்ளுங்கள். எலும்பிச்சை 1 தேக்கரண்டி பழச்சாறு எடுத்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.பின் கலந்து வைத்த பேஸ்ட்டை முகத்தில் பிக்மென்டேஷன் எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்..மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை பயன்படுத்தினால் போதுமானது. இந்த குறிப்பை ஒரு வாரம் தொடர்ந்து அப்ளை செய்யுங்கள்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News