செடிகள் செழித்து வளர நுண்ணுயிர் பாகாடீரியாவை பயன்படுத்தும் முறை
மாடித்தோட்டம் (maadi thottam) பூ செடிகள் மற்றும் காய்கறிகள் நன்கு செழிப்பாக வளர நுண்ணுயிர் பாகாடீரியாக்கள் மிகவும் பயன்படுகிறது.
எனவே இரண்டு ஸ்பூன் ட்ரைக்கோ டெர்மா விரிடி மற்றும் இரண்டு ஸ்பூன் சூடோமோனஸ் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பானை பயன்படுத்தி செடிகள் மீது தண்ணீர் படும்படி தெளிக்கவும்.
இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை செய்து வர செடிகள் செழிப்பாக வளரும்.
உங்கள் விட்டு மாடி தோட்டம் (maadi thottam) செடிகள் மஞ்சள் மாறி உதிர்ந்து கொட்டுகிறதா? கவலை விடுங்கள் செடிக்கு தழைச்சத்து பற்ற குறையாக இருக்கும்.
செடி முழுமையாக தழை சத்தினை பெற மீன் அமிலத்தை 25 மில்லி எடுத்து கொள்ளுங்கள். அவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் இலைகள் மீது படுமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கின்றது செடிகள் வளமாக வளர வழிவகுக்கின்றது.
0
Leave a Reply