உலக வாசக்டமி இருவார நிகழ்ச்சியினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்
உலக வாசக்டமி இருவார நிகழ்ச்சியினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான
ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் 03.12.2022 அன்று திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யும் நபருக்கு ரூ.3300/- (ரூபாய் மூவாயிரத்து முன்னூறு ) வழங்கப்படும்.
பெண்களுக்கு செய்யும் குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.
சிறப்பம்சங்கள்: மிக மிக எளிமையானது, மிகவும் பாதுகாப்பானது, பயப்பட தேவையில்லை,மயக்க மருந்து கொடுப்பதில்லை, 5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது, தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை, சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம்.
அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட செய்து கொள்ளலாம். கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும்; முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்யலாம். ஆண்மைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
குறிப்பாக இரத்த சோகை, இதய நோய் மற்றும் பிற மருத்துவ காரணங்களினால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத தாய்மார்களின் கணவன்மார்கள் தாமாக முன் வந்து கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு அரசு தரும் பயனீட்டுத்தொகைரூ.1100/-, ஊக்கத்தொகை ரூ.200/- மற்றும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 2000/- சேர்த்து ஆக மொத்தம் ரூ.3300/- ஒவ்வொரு பயனாளிகளுக்கு வழங்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்படும் ரூ.2000/- பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமெனவும், முகாம் ஏற்பாடுகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி., I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply