ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள்
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அரசு ஆஸ்பத்திரி கடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. பொதுமக்களின் வசதிக்காக கடந்த ஆண்டு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ராஜபாளையம் மட்டு மின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு பொது மக்களுக்கு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கும் விதமாக ரூ.40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் அமைய ஏற்கனவே உள்ள 221 படுக்கை வசதிகளுடன் மொத்தம் 439 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக புதிய ஆஸ் பத்திரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது
0
Leave a Reply