மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவை
மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது மணத்தக்காளிக் கீரை.சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் கீரையும் ஒன்று. குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட மணத்தக்காளிக் கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது
மணத்தக்காளிக் கீரையின் காய், பச்சை மணியைப் போல இருக்கின்ற படியால் மணித்தக்காளி என்று அழைப்பார்கள். ஆகமிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வறண்ட இடத்திலும் விளையும் மணத்தக்காளிக் கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் மருபூக்கள் பூக்கும். . இது பொதுவாக குப்பைகள் இருக்கும் இடத்தில் வளர கூடியது.
மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே. இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாதுப்உப்புக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக் கீரையைப் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.
மணத்தக்காளிக் கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்புளித் துவந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.
மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.
இதய பல வீனம் கொண்டவர்கள் வாரம் மூன்று முறை இந்த மணத்தக்காளிக் கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.
உடல் வலி தீரும். களைப்பை அகற்றும். உடலிலுள்ளநச்சுநீரை வெளியேற்றும். வாந்தியைப் போக்கும். இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம் .காது வலியைப் போக்கும். வயிற்றுப் பொருமலை தணிக்கும்.
காய்ச்சலைப்போக்கும்.கருப்பப்பைக்கு வலிமை தரும்.பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.மலச்சிக்கலைப் போக்கும்.
மணத்தக்காளிக் கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது.
பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால், உடல் நலம் பெறுகிறது. ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகிறது. மணத்தக்காளிக் கீரை சிறந்த மருத்துவ உணவாக நமக்கு பயன்படுகிறது. எனவே மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
0
Leave a Reply