பாதாம் பிசினில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்
பாதாம் பிசினில்எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்உள்ளன.தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது. மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.
பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது. மூலநோய் கொண்டவர்களும், பாதாம் பிசினில் இருந்து நன்மைகளை பெற முடியும். பாதாம் பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
.பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில்90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம்.நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.
இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் உட்பொருட்கள் கோடை கால சரும வறட்சியை போக்க கருவுறுதலுக்கு முன் உடலை வலுப்படுத்த பாதாம் பிசின் உதவுகிறது.கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது பிரசவித்த பின்னர் மாதவிடாய் சுழற்சி முறையாவதற்கு உதவுகிறது.
பாதாம் பிசின் உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்ல உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்தஉணர்வைகொடுப்பதால்பசியைக்கட்டுப்படுத்துகிறது.பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.
0
Leave a Reply