பாதாம்பருப்பு சூப்
பொதுவான உடல் வளர்ச்சிக்கும், உடல் நல்ல உரம் பெறவும், இந்த சூப்உதவும். இந்த சூப்பைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களின் மேனியழகு அதிகமாகி மிகுந்த உடல் கவர்ச்சியைப் பெறுவார்கள்.
தேவையான பொருட்கள் - பாதாம் பருப்பு 50 கிராம், பீன்ஸ் 2, சிறுகீரை 1 கைப்பிடி, இஞ்சி 1 சிறிய துண்டு, வெண்ணெய் 10 கிராம், சோளமாவு 1 மேஜைகரண்டி, காரட் சிறியது 2, தக்காளி 2, உருளைக்கிழங்கு 2, லவங்கப்பட்டை1, மிளகு 1 சிறிதளவு, உப்பு தேவைக்கு,
செய்முறை - பாதாம் பருப்பைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டுத் தோலை உரிக்கவும். வெண்ணெய் போல அரைத்துக் கொள்ளவும். காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும், வெங்காயத்தையும், இஞ்சியையும் பொடியாக நறுக்கவும். மிளகு, உப்பு, பொடி செய்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெண்ணையைப் போடவும் ,உருகியதும் லவங்கப்பட்டை, வெங்காயம் இரண்டையும் போட்டு வதக்கவும், வதங்கியதும், மாவைப் போட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் விடவும். சிறிது நேரம் கழித்து காய்களையும், அரைத்த பாதாம் விழுதையும் போட்டுக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து எல்லாம் வெந்து கரைந்து தண்ணீர் பாதியாகச் சுண்டியதும், மிளகு, உப்பு பொடியைப் போட்டுக் கிளறி இறக்கிவிடவும், சற்று ஆறியபின் பருகலாம்.
0
Leave a Reply