ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி, இந்திய அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது
50 நிமிடங்கள் வரை போராட்டம் நீடித்த நிலையில் ,இந்திய வீரர் ஜூக்ராஜ் சிங் முற்றுப்புள்ளி வைத்தார். 51-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் சீன வீரர்களுக்கு லாவகமாக தட்டிக் கொடுத்த பந்தை ஜூக்ராஜ் ஓங்கி அடித்து வலைக்குள் அனுப்பி இந்திய வீரர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். கோலாகவும் அமைந்தது. கடைசி 4 நிமிடங்களில் சீனா கோல் கீப்பரை எடுத்து விட்டு கூடுதலாக ஒரு வீரரை இறக்கிப் பார்த்தும் பலன் இல்லை.
முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது. தொடரில் தோல் வியே சந்திக்காமல் வீறுநடைபோட்ட இந்தியா, ஏற்கனவே - 2011, 2016, 2018, 2023- ம் ஆண்டுகளிலும் இந்த கோப்பையை வென்றது. வேறு எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றதில்லை.
தொடரில் மொத்தம் 7 கோல்கள் அடித்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்க் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கையோடு இந்தபோட்டிக்கு வந்த இந்தியா மீண்டும் 'ஆசியா கிங்' என்பதை நிரூபித்து காட்டி விட்டது.
சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் தொடர் முழுவதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில் 5 போட்டியிலும் வெற்றி பெற்றது. அரை யிறுதியில் தென் கொரியா, பைனலில் சீனா என பங்கேற்ற 7 போட்டியில் 100 சதவீத வெற்றியுடன் கோப்பை கைப்பற்றியது.
கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் ஒவ் வொருவருக்கும் தலா ரூ. 3 லட்சம் தருவதாக இந்திய ஹாக்கி அமைப்பு அறிவித்துள்ளது. தவிர சக பயிற்சி யாளர்களுக்கு தலா ரூ. 1.5 லட்சம் தரப்பட உள்ளது. வீரர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட இந்திய தேசிய கீதம் இசைக்கப் பட்டது.
0
Leave a Reply