மல்லிபூத்துக்குலுங்க வாழைப்பழத் தோல்
வீடுகளில் செடிவளர்க்க விரும்புபவர்கள் ஒன்று ரோஜா,மற்றொன்று மல்லி. செடிகளை வாங்கி வைத்துவிட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் என்று இருந்துவிடுவார்கள், மனிதர்களை போல்செடிகளுக்கும் தேவையான சத்துகளை அவ்வபோது கொடுத்து வந்தால் செடிகளும் நன்றாக வளரும்,செடிகளை வளர்க்க இணையத்தில் சில டிப்ஸ்கள் சுற்றி வருகின்றன, அவை சரியானதா என்பதை நன்கு அறிந்த பிறகு அவற்றை ஃபாலோ செய்தால் செடிக்கும் நமக்கும் நன்மை பயக்கும். இப்படி மல்லிகை பூக்கள் பூத்து குலுங்க இணையத்தில் ஒரு டிப்ஸ் சுற்றி வருகிறது. அதில், பச்சையான வாழைக்காயை தோலுடன் சிறிது, சிறிதாக நறுக்கி தேவையான நீர் ஊற்றி நன்கு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீருடன் டீ தூள் சேர்த்து அதையும் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் மேலும் இரண்டு மடங்கு சாதாரண தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்து வந்தால் மல்லி பூ நன்கு பூத்து குலுங்கும் என சொல்லப்பட்டிருந்தது.
இதன் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ள மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில்,5,,6 வாழைப்பழ தோலை சேகரித்து அதை ஒரு பாட்டிலில் போட்டு இரண்டு, மூன்று நாள்கள் நன்கு ஊறவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு ஸ்பிரே செய்தாலே போதும்செடி நன்றாக வளரும், எந்த பூக்களும் நன்கு பூக்கும். இதில் பொட்டாஷியம் அதிகமாக உள்ளது அதனால் செடிகளுக்கு நல்லது, மேலும் ஊறவைத்த தோல் கூழ் போல ஆகியிருக்கும் அதையும் அதே மண்ணில் கொட்டி வைத்தால் செடி மேலும் செழுமையாக இருக்கும்.வாழைப்பழ தோலுடன் நாம் பயன்படுத்திய டீ தூளை சேர்த்து ஊறவைத்து செடிகளுக்கு பயன்படுத்தலாம். செடிகளுக்காக தனியாக கடையில் வாங்க வேண்டியதில்லை, நாம் பயன்படுத்திய பொருள்களை செடிகளுக்கு கொடுத்தாலே போதும்.
இதுஇல்லாமல் முட்டைதோலை சிறிதாகஉடைத்து, அதைவாணலியில் போட்டுசற்று வறுக்கவேண்டும். முட்டையின்மேல் உள்ளதோல் சிலசயமயங்களில் அழுகிதுர்நாற்றம் வரும்அதனால் ஓட்டைவறுத்துவிட்டா அந்ததோல் மொறுமொறுவெனஆகிவிடும் துர்நாற்றம்வராது. ஆகவேமுட்டை தோலைசற்று நிறம்மாறும் வரைவறுத்து அதைஒரு பாட்டிலில்போட்டு அதனுடன்வீட்டில் பயன்படுத்தும்வினிகரை கலந்துவைக்க வேண்டும். முட்டையுடன் வினிகர்கலந்ததும் நீர்குமிழிகள் வரும்அப்படியே விட்டுசில மணிநேரங்களுக்கு பிறகுஅதனுடன் மேலும்கொஞ்சம் தண்ணீர்சேர்த்து செடிகளுக்குஸ்பிரே செய்தாலும்செடி அற்புதமாகவளரும். நன்குதரமான மண்ணில்இதை செய்தால்உடனடியாக ரிசல்ட்தெரியவரும், மண்ணின்தரம் சற்றுகுறைவாக இருந்தால்எதிர்பார்த்த அளவுபூக்கள் பூக்கசற்று நாள்கள்எடுக்கும். வாழைப்பழத்தோல் கரைசல்மற்றும் முட்டைஓடு கரைசல்இதை இரண்டையும்மாற்றி மாற்றிசெய்தாலே போதும்செடிகள் பூத்துகுலுங்கும்” என்றுபகிர்ந்துக்கொண்டார்.
0
Leave a Reply