துளசி
வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவரும்.
துளசி இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் எளிதில் கிடையக்கூடிய ஒரு பயனுள்ள தாவரமாகும். இது புராணக்காலம் முதலே முனிவர்களாலும், மக்களாலும் வழிபடப்பட்டு வருகிறது. இது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது மனதை அமைதிப்படுத்துகிறது , மகிழ்ச்சியையும் பரப்புகிறது. .மேலும் இதில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதை நமது வீட்டின் சுற்றுப்புறத்தின் வைத்தால் போதுமானது. எந்த திசையில் வைக்க வேண்டும்: வீட்டின் "பிரம்ம ஸ்தானம்" என்றும் அழைக்கப்படும் வீட்டின் மையத்தில் இதனை வைக்க வேண்டும். ஒருவேளை அங்கு வைக்க முடியவில்லை என்றால், வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் காலை சூரிய ஒளி படும் வகையில் வைக்கலாம். துளசியை தெற்கு திசையில் வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அசுபமாக கருதப்படுகிறது மற்றும் இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை ஊக்குவிக்கும்.
0
Leave a Reply