பாரத் பெட்ரோலியம் ரூ.1.70 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டம்.
அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோ கெமிக்கல் பசுமை எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட துறை களில், 1.70 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது - எங்களது முக்கிய வணிக நடவடிக்கையான, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில், தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். அதே சமயம், பெட்ரோ கெமிக்கல்ஸ், காஸ், பசுமை எரிசக்தி உள்ளிட்டவற்றிலும் சரிசமமாக கவனம் செலுத்தி வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரி சக்தி வாயிலாக, 2025ம்ஆண்டுக்குள் 2 ஜிகா வாட் மின் உற்பத்தி திறனும், 2035க்குள், 10 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனும் கொண்ட கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
அடுத்தஐந்துஆண்டுகளில், எங்களது 6,000சில்லரைஎரிபொருள்விற்பனைநிலையங்களில், நான்குசக்கரவாகனங்களுக்குகான, விரைவான சார்ஜிங் வசதியை வழங்கும் சார்ஜிங் நிலையங்களையும் அமைக்க உள்ளோம் என்று கூறினார்.
0
Leave a Reply