இராஜபாளையத்தில் சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சைக்கிள் போட்டி
இராஜபாளையத்தில் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், விருதுநகர் சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் மாநில போட்டிகள் நடந்தன. 12, 14, 16, 18 வயதிற்கு மேற்பட்டோர் என 12 பிரிவுகளில் போட்டிகள் 5 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு வயதிற்கு தகுந்தபடி அய்யனார் கோயில் வரை போட்டிகள் நடைபெற்றன.
ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் ராஜ்சத்யன் கொடி அசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ராஜிக்கள் கல்லூரி முதல்வர் வெங்கடேஷ்வரன் வரவேற்றார்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணிய ராஜா செய்திருந்தார்.
0
Leave a Reply