இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்
மாவட்ட அளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கான குறுவட்ட அளவிலான குழு, விளையாட்டு போட்டி கள் ஜூலை24-ம் தேதி தொடங்கி 14, 17, 19 வயது பிரிவு மாணவ மாணவியர்கள் என 27 பள்ளிகளில் இருந்து 1800 மாணவர்கள் பங்கேற்றனர் பள்ளிகளுக்கான இராஜபாளையம் குறுவட்டம் அபிரிவுபோட்டிகள்ஸ்ரீரமணவித்யாலயா மாண்டிசேரிமேல்நலைப்பள்ளி சார்பில் நடந்தது. ஏற்பாடுகளை முதல்வர் சுதா, உடற்கல்வி இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
குழு போட்டிகள் தொடங்கி தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் சுதா வரவேற்றார். ஆலோசகர் டாக்டர். கு. கணேசன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாகிர் உசேன் ஒலிம்பிக் கொடி ஏற்றினார். மாணவியர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை பி.ஏ.சி.ஆர். அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி வென்றது.
0
Leave a Reply