கால நிலை மாற்றமும் யானைகளும் கருத்தரங்கம்
இராஜபாளையத்தில் தமிழ்நாடு வனத்துறை, வார் டபிள்யூ.டி.ஐ சார்பில் நடந்த காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்தரங்கத்தில் கோவையை சேர்ந்த ஓசை அமைப்பு தலைவர் காளிதாசன் பேசுகையில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் இல்லையெனில் தென்னிந்தியா பாலைவனம் ஆகியிருக்கும்.
தமிழ்நாட்டில் சராசரியாக 35 முதல் 50 நாட்கள் மட்டுமே மழை, ஆனால் இம்மலைக்காடுகளில் உள்ள புல்வெளிகள் 365 நாட்களும் தண்ணீரை நிறுத்தி வைத்து ஆறுகளுக்கு வழங்கி வருகிறது. யானைகள் தின்ற பழங்கள் மூலம் வயிற்றில் இருந்து வெளிவரும் விதை சிறந்த முளைக்கும் திறனை அடைகிறது.தினமும் இவை 30 கிலோ மீட்டர் நடந்து விதை பரவல் மூலம் 300 அரிய வகை மரங்கள் வளர உதவிபுரிவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யானைகளை சார்ந்து சிறிய நுண்ணுயிர்கள் முதல் பெரிய மரங்கள் மான், மாடு, உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. எனவே இயற்கை சமன்பாட்டுக்கு யானைகள் மிகவும் அவசியம் என்றார்.
இயற்கைக்கு எதிரான செயல்களால் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று வருகிறோம். மாணவர்கள் கல்வியோடு இயற்கை சுற்றுச்சூழலையும் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்கான தீர்வுகளையும் மாணவர்களே கண்டுபிடிக்க வேண்டும். என்றார், முன்னதாக யானை வழித்தட பாதுகாப்பு உறுப்பினர் சுப்ரமணியன் வரவேற்றார்.தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவன ஆட்சி குழு உறுப்பினர் நிர்மலா ராஜா கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா வாழ்த்தினர். விழிப்புணர்வு செங்கோல் சென்னை கொண்டு செல்வதற்காக கூட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஓவிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. யானைகள் புகைப்பட கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.
0
Leave a Reply