அரசு பள்ளி மாணவர்களுக்கான காலநிலை கல்வி அறிவு மற்றும் கோடைகால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (15.04.2024) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து ஏற்பாடு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கான காலநிலை கல்வி அறிவு மற்றும் கோடைகால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்-2024 யினை துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்.
காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை தற்போது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தற்போது பயிலும் மாணவர்கள் சமூகத்தில் பெரியவர்களாக ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் போது, இன்னும் ஒரு 50 ஆண்டுகளில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்க போகின்றது.இயற்கை சமநிலையோடு இருந்ததை, வனவிலங்குகளை வேட்டையாடுதல், மரங்களை அழித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, கார்பன் டை ஆக்சைடு உருவாக்கக்கூடிய செயல்களை வெவ்வேறு வழிகளில் மேற்கொள்வது இது போன்ற காரணங்களால், பூமி பந்து வெப்பமயமாகிறது. அதன் காரணமாக அதிகப்படியான திடீர் மழை, கடும் வறட்சி, நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து, தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகுதல், உணவுச் சங்கிலியில் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சமுதாயத்தில் எதிர்காலத்தில் ஒரு முக்கிய பொறுப்பிலும், முக்கியமான தலைவராகவும், பெரிய நிறுவனத்தில் நீங்கள் செயலாற்ற போகிறீர்கள். இது குறித்து இப்போதே உங்களுக்கு அதனுடைய உணர்வு வந்தால் தான், நாளை நீங்கள் சமுதாயத்தில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.இந்த ஒருநாள் பயிற்சியில் வனப் பகுதியில் உள்ள தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் நமது சுற்றுச்சூழலில் செலுத்தக்கூடிய ஆதிக்கம் என்னென்ன சுற்றுச்சூழலினுடைய செல்வாக்கு என்ன என்பதை எல்லாம் நீங்கள் நேரடியாக தெரிந்து கொள்வீர்கள்.அது மட்டும் இல்லாமல் நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பயிலக்கூடியவற்றை நீங்கள் வாழ்நாளில் என்றும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply