மூடாக்கி போடுதல்
மூடாக்கி போடுதல் என்பது மூடிபோடுதல் எனலாம். மூடாக்கு இடுவதன் முக்கிய நோக்கம் விளைச்சலை அதிக படுத்துவது ஆகும். இதற்காக பயிர்களுக்கு இடையே இலைதழை, வைக்கோல் (Straw), கரும்பு சோகை ஆகியவற்றைக் கொண்டு மூடி விடுவார்கள். இதனால் வேர் (Root) பகுதிகளின் ஈரப்பதம் பாதுகாக்க பட்டு மண்புழுக்கள் வளர எதுவாக இருக்கும். களை செடிகளின் வளர்ச்சி கட்டுப்பாடு மண்ணின் தன்மை காக்கப்படுகிறது.
இயற்கை உரங்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துதல்
இயற்கை உரங்கள் (Natural Compost) ஆன மண்புழு உரம், சாண எரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழைஉரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
பயிர்கள் நன்கு செழித்து வளரஅதிக இயற்கை பயிர் வளர்ச்சிஊக்கிகளான குணப்பசலம், தேங்காய்பால்மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யாஆகியவை பயன் படுத்த வேண்டும்.
பயிர்களுக்கிடையேயானஇடைவெளி
நம் முன்னோர்கள் ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி நெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்ப வகுத்தனர்.
0
Leave a Reply