பேரீச்சை டிலைட்
தேவையான பொருட்கள் - பேரீட்சைப்பழம் 50 கிராம், தேங்காய் பால் 1 டம்ளர், ஐஸ் சிறிதளவு, ஆப்பிள் ஒன்று.
செய்முறை - கொட்டை நீக்கிய பேரீச்சை, ஆப்பிள் இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் தேங்காய் பால் சேர்த்து, நுரை பொங்க மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். விரும்பினால் ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம்.
பேரீட்சை இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸ் செய்து பருகலாம். அனைத்து வயதினருக்கும் இது மிகச் சிறந்தது.
0
Leave a Reply