முடிவு எடுப்பதில் தாமதம் வேண்டாமே !
பலருடைய உள்ளத்தில் இந்த ஒரு கேள்வி எழாமல் இருப்பதில்லை. தான் செய்யுயம் ஒவ்வொரு யெலும் சரியா ? தவறா ? என்று யோசிப்பதிலேயே காலத்தையும், மனசையும் கெடுத்துக் கொள்கின்றனர். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெரியவர்கள் கூட உனக்கு எது சரின்னு படுதோ அதைச் சட்டுபுட்டுன்னு செய்வியா ? என்பார்கள்.
ஏனென்றால் முடிவெடுப்பதில் யோசித்துக் கொண்டு யாரிடமாவது முடிவெடுக்கலாம். என்றால் அவசர முடிவுகளுக்கு என்ன செய்வார்கள். கேட்டுசரியா ? தவறா ? என்ற யோசனை சாதாரண உடை விஷயத்திலிருந்து அடுக்கிக் கொண்டே போகலாம். திருமணத்திற்கோ நிச்சயதார்த்தம், சங்கவிழா, ஏன் துஷ்டி வீட்டிற்குப் போவதற்குக் கூட பல பெண்கள் என்ன புடவை, என்ன நகை போடுவது என்று அலை பாய்ந்து நொந்து போகின்றனர். அவர்கள் மனம் எது சரி ? என்ற தெளிவான சிந்தனையை சிந்திப்பதில்லை. சரி சமையலை எடுத்துக் கொள்வோம், விருந்தாளி வருகிறார்கள். வகையா சமைக்கணும், என்ன சமைப்பது என்று யோசித்தே சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தலைவலியில் படுத்து விடுகின்றனர்.
வியாபாரத் துறையிலும் சரி முடிவெடுப்பதற்கு படாதபாடு படுவார்கள். பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்குள் உள்ளம் பதறி மனம் படபடத்து செய்வதறியாது திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள் பலர்.இந்த மனிதர்களிடையே ஒரு சிலர் முடிவெடுப்பதில் தாமதிக்காமல் டக்கென்று முடித்த விடுவார்கள். இப்ப என்ன ? நடக்கிறது .நடக்கட்டும் எந்த வியாபாரம் தான் டென்ஷன் இல்லாதது வரும்போது,பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக பிரகாசிக்கிறார்கள்.
என்ன ஆகி விடுமோ ? என்ற பயம் இருக்கும் வரை நம் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. ஆதனால் முடிவெடுப்பதில் முட்டாள் தனமான முடிவும் கஷ்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்.நாள், நட்சத்திரம் பார்த்து பல விஷயங்களைத் தள்ளிப் போடுபவர்கள் அவசரமாக வைத்தியம் செய்வதைத் தள்ளிப் போட்டு உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வருபவர்கள் உண்டு.
வீட்டை விட்டு புறப்படும் பொழுது மந்தாரமாக இருக்கே ,குடை எடுத்துட்டுப் போகவா ? வேண்டாமா ? என்று ரெம்ப நேரம் குழம்புவார்கள். முடிவெடுப்பதில் உள்ள குறை" ஒன்று குடை எடுத்துட்டுப் போங்க ,இல்லாட்டி நனைஞ்சுட்டு வந்தா உங்க மண்டையிலே என்ன செடியா முளைச்சிடும். துணி தானே நனையும் காயப் போட்டுக்கலாம்" ! இது துரிதமாக முடிவெடுக்கும் மனைவியின் அபிப்ராயம்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை, நடப்பது நடக்கட்டும் எனக்கு இது சரியென்றுபடுது நான் செய்கிறேன். தவறவிட்டா அப்புறம் திருத்திக்கிறேன் இது முடிவெடுப்பதில் தைரியம் உள்ளவர்களின் மனப்பான்மை நீங்க எப்படி ? முடிவெடுப்பதில் தாமதம் வேண்டாமே !
0
Leave a Reply