தூவானம் 2020 2021
இரு மகான்களின் திருவிழா ஒரே தினத்தில்! அதே நாளில் எம் பள்ளி பாரதியின், பிரதிகளின் அணிவகுப்பு மேலும் சிறப்பு. பாரதிகளின் திறமைகளைப் பார்க்க வந்த சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாகவே மாறிப் போன விதம் அருமை. திரு. சோமசுந்தரம் அவர்களின் சிலேடைப் பேச்சு அற்புதம். வருங்கால இந்தியாவின், நேர்மையான தலைவர்களை உருவாக்க ஆசைப்படும் உன்னத தலைவரான திரு.ஷியாம் அவர்கள், உயரிய கருத்துக்களை எடுத்துச் சொன்ன விதம் மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. எம்பள்ளியின் பாரதிகளிடையே நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்தியும், வெளிக்கொணர வைத்தும்,கதை சொல்லும் ஆசானாக மாறி வாழ்க்கையின் மதிப்புகளை எடுத்துச் சொன்ன திரு.வெங்கடேசன் அவர்களின் பேச்சு பாராட்டுக்குரியது. மாணவர்கள், பாரதியின் பிம்பமாகவே மாறி அவருடைய கருத்துக்களையும், உணர்வுகளையும் பேச்சுத் திறமை மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள். பார்ப்பவர்களுக்கும் பாரதியின் எண்ணங்களை நினைவூட்டி அவர்களையும் பங்களிக்க தூண்டிய மாணவர்களின் செயல்பாடுகள் வியப்பைத் தந்தது. பாரதி கண்ட புதுமை பெண்களாய் வலம் வரும் பள்ளி தாளாளர் திருமதி.ஆனந்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியை திருமதி. ஜெயபவானி அவர்களும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவச் செல்வங்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.
0
Leave a Reply