தற்காலிகமாக நிரப்பப்பட்ட உள்ள ஒப்பந்த அடிப்படையிலான மருந்தாளுநர்கள், துணை சுகாதார செவிலியர், இயன்முறை மருத்துவர் மற்றும் நுண்கதிர் வீச்சாளார் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர்கள், துணை சுகாதார செவிலியர், இயன்முறை மருத்துவர் மற்றும் நுண்கதிர் வீச்சாளார் ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 12.12.2024 பிற்பகல் 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply