‘கபீர் புரஸ்கார் விருது” பெற விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது” 2025-ஆம் ஆண்டு குடியரசு தினவிழா தினத்தன்று வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2025-ம் ஆண்டு கபீர் புரஸ்கார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்;
1. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர்.
2. இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
3. இவ்விருதானது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000-, ரூ.10,000- மற்றும் ரூ.5,000-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
4. கபீர் புரஸ்கார் விருது குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
5. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.15.12.2024. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
6. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் அனுப்பிட வேண்டும்.
மேலும், கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர். 04562- 252701 / 86808-88634 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply