ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 1029 நியாயவிலைக்கடைகளிலும், பொது விநியோகத்திட்ட குடும்ப அட்டைதாரர்கள் கடந்த 2024 ஜூன் மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஜூலை மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply