வெந்தயக் கீரை வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்
மேத்தி’ என்றும்அழைக்கப்படும் வெந்தயம் பருப்புவகை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த தாவரத்தின் விதைகள்மற்றும் இலைகள் இரண்டும்உண்ணக்கூடியவை. விதைகள் மசாலாப்பொருளாகவும், உலர்ந்த இலைகள்மூலிகையாகவும், புதிய இலைகள்கீரை வகை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இந்தவெந்தயக்கீரை சமையல், மசாலா , அழகுசாதன பொருட்கள், சோப்புகள் மற்றும் மருந்துகள் தயாரிக்க என பல்வேறுவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.வெந்தய விதைகள்மூட்டு வலியை நீக்குதல், இரத்த சர்க்கரை அளவைக்குறைத்தல் மற்றும் முடிவளர்ச்சியை அதிகரிக்க எனசிறந்த மருத்துவ குணங்கள்நிறைந்ததாக காணப்படுகிறது.வெந்தயம்கீரை தாவரம், மண்ணில் நைட்ரஜனின் அளவை சரிசெய்ய உதவுகிறது.
வெந்தய செடியைவளர்க்க, பகுதியளவு சூரியஒளி படும் இடத்தைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது 4 முதல் 5 மணி நேரசூரிய ஒளிப்படும் இடமாகதேர்தெடுக்க வேண்டும்.ஒருஇடத்தில் நடுவு செய்தல்அதனின் முதிர்ச்சியடையும் காலம்வரை ஒரே இடத்தில்இருப்பது சிறந்தது. அதனால்வெந்தய செடிகளை கொள்கலன்களில் நடவு செய்யலாம்.வெந்தய செடிகள் வெதுவெதுப்பான மண்ணில் செழித்து வளரக்கூடியது. எனவே தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஆனால் வடஇந்தியாவில் மார்ச், ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் நவம்பர் வரை பயிர் செய்வது சிறந்தது.
வெந்தய செடிகளை நடவு செய்வதற்கு முன்னால் அந்த வெந்தய விதைகளை, அறை வெப்பநிலையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் விதைகளை ஒரே இரவு ஊற வைக்கவும் மறுநாள் நடவு செய்வதற்கு தண்ணீரை வடிகட்டிய பின்னர் அதனை நடலாம்.தேர்தெடுத்த இடத்தில் விதைகளை மண்ணில் சமமாக தூவி,1/4 அங்குல மண்ணில் விதைகளை மூடவும்.மண் சமமாக ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், செடிக்கு அதிகமாக தண்ணீர் விடாதீர்கள், தண்ணீர் தேங்கியுள்ள மண் செடியின் வளர்ச்சியை தடுக்கும்.நடவு செய்த3 முதல்4 வாரங்களில் செடி அறுவடைக்கு தயாராகிவிடும்.
0
Leave a Reply