விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 30.11.2022 அன்று மாலை 4.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply