நிலை மாறும் உலகில்
இயற்கைகளும்,செயற்கைகளும் நிறைந்தஇந்த பூமியில்ஒவ்வொரு நாளும்,ஏன்? ஒவ்வொருநொடிகளிலும் கூடபல வித
மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.மாற்றத்திற்குஏற்றார் போலபல விஷயங்களில்நம்ப முடியாத முன்னேற்றங்களும், நினைத்துக் கூடபார்க்க முடியாதஅசம்பாவிதங்களும்நடைபெற்று வருகின்றன.
நிலை மாறும்உலகில் நாம்காலத்திற்கு ஏற்றாற்போலநம்மை நாம்மாற்றிக் கொள்ளவேண்டும். எப்படி? நாகரீகம் வளர்ந்துவிட்டது. ஆகவேஅதன்படி நடக்கவேண்டும். எது நாகரீகம். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவதும், டிரிங்ஸ் பார்ட்டி என்று போவதும், தலையை விரித்து பறக்க விடுவதும், ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து ,குட்டைப்பாவாடை அணிவதும் மட்டும் நாகரீ கம்அல்ல. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆண்களும், வேலை செய்யக் கூடாது என்ற பழக்கத்தை எல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டும். இருவரும் வேலைக்கு போகும் பட்சத்தில் ஒற்றுமையாக எல்லா வேலையையும் ,பகிர்ந்து செய்து கொண்டு, வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டிச் செல்லலாம். அதைத் தவிர்த்து ஆண்களும் சரி, பெண்களும் சரி நிலை மாறி இருக்கின்ற உலகின் மாற்றத்தில், எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அதை நம் கலாச்சாரமும், பண்பாடும் மாறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் . நாகரீகம் என்ற பெயரில் ஆணவமும், அகம்பாவமும், நம் வாழ்வை ஒரு நாளும் சுகமாக வைத்திருக்க முடியாது.
ஆங்கிலம்கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.அது உலகிற்குபொதுவான மொழி.அம் மொழியைஇங்கே அர்த்தமில்லாமல்தெரியாதவர்கள் பக்கத்தில்பேசி 'கிக்கிக்கீ' என்று சிரிப்பது ,படிப்பறிவும், பண்பும் இல்லாத அநாகரீகம்.
அதே ஆங்கிலமொழியை ,படிப்பதற்கும்.வெளிநாடுகளில் வேலைக்கும்,வியாபாரத்திற்கும் நாம் ஸ்மார்ட்டாகப் பேசினால் அது
பண்பு.ஆங்கில மொழி பேசுவது ஒருபக்கம் வேண்டும்,வேண்டாம் என்றுசொல்வது மாறும்,உலகிற்கு ஏற்றபடி நடப்பதற்காகத்தான். எதைத் தெரிந்துகொண்டாலும் நம்முடைய,பண்பை மறந்துவிடக் கூடாது. பழைய பாரம்பரியத்தைவிட்டு விடக்கூடாது என்பதற்காக , ஆட்டுக் கல்லில் மாவைக் கையால் தான் ஆட்ட வேண்டும்,. . அம்மியில்தான்அரைக்க வேண்டும்,என்றுகூறுவது, நேரத்தைவீணாக்குவதற்கு நாம் காரணமாகக் கூடாது. அதற்குத் தகுந்தாற்போல மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், செல்போன், கம்ப்யூட்டர் என்று
அடுக்கிக் கொண்டே போகலாம் ,நேரத்தை மிச்சப்படுத்த..
உலக மாற்றங்களில் ஓரளவிற்கு நம்மை மாற்றிக் கொள்ளலாம். நம் பண்பு, கலாச்சாரத்தை மாற்றாமல் இருந்தால் நாம் நம்மை
இவ்வுலக மாற்றத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். நாகரீகமாக இருந்துகொண்டு நாகரீகம் என்ற வலையில் சிக்காமல் ,
தாமரை இலையில் உள்ள தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல், இந்த நிலை மாறும் உலகினை அனுசரித்து நிம்மதியான வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளை,மாத்திரம் பார்த்துக்கொண்டு, ஆண்கள் கண்களில் படாமல்,இருந்த காலம்மாறிப்
போய்,பெண்கள் எல்லாத்துறைகளிலும் பிரகாசிக்கின்றனர்.இவைகள் வரவேற்கத்தக்கமாற்றங்கள். ஆனால் அதேபெண்கள் நாகரீகம்என்ற பெயரில் ஆணவமாகத் திரிந்தால் அது ஆபத்து.
நாகரீகம் செல்லும் வேகத்தைப் பார்த்தால் பெரியவர்களெல்லாம் நாம் இருக்கும் பொழுதே எத்தனை அநியாயங்களைப் பார்க்கவும், கேட்கவும் போகிறோமோ என்று பயந்து கொண்டிருக்கின்றனர். அதே நாகரீகத்தை பயனுள்ள வகையில் நாம் ஏற்றுக்
கொண்டால் கொலை, கொள்ளை, தீவிரவாதம், அநியாயம், ஏமாற்றுதல் போன்றவை அண்டாமல் நம்மை விட்டு சென்று விடும்.
பகவத் கீதையும், திருக்குறளும் உருவாகியுள்ள இந்திய நாட்டில் பண்பாட்டை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் அசம்பாவிதங்களா அப்படீன்னா? என்ன? என்று இனிவரும் இளைய சமுதாயத்தினர் கேட்க வேண்டும்.
0
Leave a Reply