தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக 18 வயது நிரம்பிய இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி போட்டி
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக 18 வயது நிரம்பிய இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (14.04.2024) பரிசுகளை வழங்கினார்.அதன்படி, இந்த மாவட்ட அளவிலான ஆண்கள் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற மம்சாபுரம் ஆசை நினைவு அணிக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 க்கான காசோலையினையும்,கிருஷ்ணாபுரம் சிவந்தி இன் தாமரை அணிக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 க்கான காசோலையினையும்,தோணுகால் மாரியம்மன் நினைவு அணி மற்றும் சிவந்திப்பட்டி GFC & SPR அணி ஆகிய இரு அணிகளுக்கு மூன்றாம் பரிசாக ரூ.25,000 க்கான காசோலையினையும்,மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் பிரிவில் திருவில்லிபுத்தூர், மங்காபுரம் ஸ்போர்ஸ் கிளப் அணிக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 க்கான காசோலையினையும்,மீனாட்சிபுரம் RC ஸ்போர்ஸ் கிளப் (A) அணிக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 க்கான காசோலையினையும்,விருதுநகர் தங்கசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் மீனாட்சிபுரம் RC ஸ்போர்ஸ் கிளப்(B) அணி ஆகிய இரு அணிகளுக்கு மூன்றாம் பரிசாக ரூ.25,000 க்கான காசோலையினையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பு வாக்களர்களும், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையிலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்கள் முழுமையாகவும், பணம், பரிசுப் பொருட்கள் பெறாமல் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக 11 வட்டாரத்தில் ஆண்களுக்கான வட்டார அளவிலான கபாடி போட்டிகள் நடத்தப்பட்டு, தலா இரண்டு அணிகள் வீதம் மொத்தம் 22 ஆண்கள் அணிகளும், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான நேரடி மாவட்ட அளவிலான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு பங்குபெறும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனியாக விதிமுறைகள் உள்ளன. அதை கடைப்பிடிப்பதோடு, விளையாட்டில் ஈடுபடும் தனிமனிதனுக்கான பழக்க வழக்கங்களில் ஒழுங்குகளையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதனை கடைப்பிடித்தால் தான் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். போதைப்பொருட்களில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை விட இது போன்ற விளையாட்டுக்கள் அதிக மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் இளைஞர்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
மேலும், இந்த மக்களவை பொதுத்தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply