தெற்காசிய கால்பந்தில் கோப்பை வென்றது இந்தியா
பூடானில் 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 9வது சீசன் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், உட்பட மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி யூத் பிரிவில் 6-வது முறையாக (2013, 2017, 2019, 2022, 2023,2024) தெற்காசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
0
Leave a Reply