IPL 2024 -சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்னும் எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்
சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் முதல் பாதி முடிவடைந்து விட்டது பெரும்பான்மையான அணிகள் ஏழு லீக் போட்டிகளில் விளையாடிவிட்டன.
ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகள் விளையாட வேண்டும். இதில் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
அதாவது சிஎஸ்கே அணி இனிவரும் ஏழு போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தான் தோற்கலாம். அதற்கு மேல் தோற்றால் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய்விடும். சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சாதகமான விஷயம் என்றால் இனி விளையாட போகும் ஏழு போட்டிகளில் நான்கு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.
இதுவரை நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் தோற்கவில்லை. இதனால் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக சென்று விடலாம்
0
Leave a Reply