Jio Brain, Jio AI cloud - புதிய ஏஐ சேவைஅறிமுகப்படுத்திய முகேஷ்அம்பானி..
இந்தியாவின் மிகப்பெரியவர்த்தக சாம்ராஜ்ஜியமானரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 47வது வருடாந்திர பொதுகூட்டம் நடந்தது. இதில் பேசியரிலையன்ஸ் நிறுவனதலைவர் முகேஷ்அம்பானி,'ஜியோபிரைன்' என்றுஅழைக்கப்படும் முழுAI லைப்சைக்கிள் உள்ளடக்கியடூல்ஸ் மற்றும்தளங்களின் தொகுப்பைஉருவாக்கி வருகிறதுஎன்று தெரிவித்தார்.இதோடு முகேஷ்அம்பானி ஜியோAI கிளவுட்டை அறிமுகப்படுத்தினார், இந்ததீபாவளி முதல்ஜியோ பயனர்கள்புகைப்படங்கள் மற்றும்வீடியோக்களுக்கு100 ஜிபிஇலவச கிளவுட்சேமிப்பு தளத்தைக்கொடுப்பதாக அறிவித்தார்.
உலகம் முழுவதும்ஏஐ சேவைகள்பெரிய அளவில்வளர்ச்சி அடைந்துவரும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் ஏஐ சேவைக்குள்ளநுழைந்துள்ளது பாராட்டத்தக்கது. இந்த ஜியோ பிரைன்சேவை மக்கள்மத்தியிலும், நிறுவனங்கள்மத்தியிலும் எத்தகையதாக்கம் ஏற்படுத்தும்என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும்ரிலையன்ஸ் தலைவர்முகேஷ் அம்பானிஜியோ பிரைன்திட்டத்தை அறிவித்ததைத்தொடர்ந்து, குஜராத்தில்உள்ள ஜாம்நகரில்நிறுவனத்தின் கிரீன்எனர்ஜியில் இயங்கும்கிகாவாட் அளவிலானAI ரெடி டேட்டாசென்டரை அமைக்கப்படும்என்று கூறினார்."நாடு முழுவதிலும்உள்ள ரிலையன்ஸ்க்கு சொந்தமானஇடத்தில்AI கட்டமைப்புவசதிகளை உருவாக்கவும்திட்டமிட்டுள்ளோம். இதுஇந்தியாவில் வளர்ந்துவரும் தேவையைபூர்த்தி செய்வதுமட்டும் அல்லாமல்அதன் பயன்பாட்டைமலிவு விலையில்வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துவிரிவுபடுத்துவோம்" என்று கூறினார்முகேஷ் அம்பானி.
ஜியோ பிரைன் என்றால் என்ன? ஜியோ பிரைன், ஜியோ நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும்AI பயன்பாட்டை வேகமாகக் கொண்டு வர எங்களுக்கு உதவுகிறது. இத்தகைய ஏஐ சேவைகள் மூலம் நிறுவனத்தில் டேட்டா அடிப்படையில் வேகமான முடிவுகள், துல்லியமான கணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்."இந்த ஜியோ பிரையன் சேவயை ஜியோ நிறுவனத்தில் மட்டும் பயன்படுத்தாமல் ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். ரிலையன்ஸ் வழியாக ஜியோ பிரைனை முழு திறன் வாய்ந்த ஏஐ தளமாக மெருகேற்றிய பின்பு, நாங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கக்கூடிய சக்திவாய்ந்தAI சேவை தளமாக அறிமுகம் செய்வோம் என நான் நம்புகிறேன்" என்று முகேஷ் அம்பானி கூறினார்.முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்(JPL) இல்67.03% பங்குகளை வைத்துள்ளது. இது ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சொத்துக்களைக் கொண்டுள்ளது.
0
Leave a Reply