இரட்டிப்பு லாபம் பெற ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்
ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழ காய்கறி விதைகளை விதைப்பது அதிக மக சூலை தரும். ஆடி மாதத்தில் விதைகளை விதைக் கும் போது விவசாயிகள் பின்வரும் தொழில் நுட்பங் களை கடைபிடித்தால் மகசூல் அதிகரித்து லாபம் இரட்டிப்பாகும்.காய்கறி விதை களை 100 மி.லி. கோமியம் மற்றும் 900 மி.லி. தண்ணீர் கலந்த கலவையில் ஊற வைத்து 1 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் முளைப்பு திறன் கூடுவதுடன் விதைகள் மூலம் பரவும் நோய்களும் கட்டுப் படும். மேலும் 1 கிலோ விதைக்கு டிரைக்கோ டெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் மூலம் பரவும் நோய் கள் கட்டுப்படும். பொதுவாக, கரை, பீர்க்கங் காய், புடலை, பாகல், பூசணி போன்ற கொடி வகை விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தபின் விதைத்தால் விரைவில் முளைக்கும்.
நல்ல வீரியமுள்ள விதைகளை தேர்வு செய்வது வீரியமுள்ள நாற்றுக்களை அளிப்பதுடன் தரமான விதை உற்பத்திக்கும் வழிவகுக்கும். வீரியமான நாற்றுக்களை நடவு செய்தால் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதுடன் நடவு வயலில் இடும் உரங்களையும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளும்.விதைப்பதற்கு முன் விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் விதைகளை தங்கள் மாவட்டங்களில் இயங்கிவரும் அரசு விதை பரிசோதனை நிலையங்களில் கொடுத்து தரத்தினை பரிசோதனை செய்து தரமான விதைகளை மட்டும் விதைத்து நிறைவான மகசூல் பெறலாம்.
கோடை மாதங்களான சித்திரை முதல் ஆனி வரை (ஏப்ரல்-ஜீலை) மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும். ஆடி மாதம் வந்தவுடன் மழை தொடங்கும் போது, நிலம் ஈரப்பதமாக இருப்பதால்விதைப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. கடும் கோடையில் இறுகிக் காணப்படும் மண் ,ஆனி மாத மிதமான மழையால் இளகத் தொடங்கி விடுகிறது. ஈரப்பதமான மண்ணில் நுண்ணுயிர்கள், மண் புழு, நத்தைகள் உள்ளிட்டவை உருவாகத் தொடங்ககின்றன. இதனால் மண் செழிப்புற்று புற்கள், சிறு செடிகள் முளைக்கத் தொடங்குகின்றன. புதிதாக முளைத்த தாவரங்களை மேயவரும் கால்நடைகளின் கழிவுகளும் மண்ணில் சேர்ந்து உரமாகிறது. இதனால் செழிப்பான மண் உழவுக்குத் தயாராகிறது. இதன் காரணமாகவே ஆடிப்பட்டத்தில் விதைத்தால், பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து, நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பயிர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் தானியங்களே விதைக்கப்படுகின்றன. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
0
Leave a Reply