சிவபெருமானுக்கு பிடித்தமான வில்வ இலை
அகில உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமாக திகழ்பவர் சிவபெருமானே. சிவபெருமானுக்கு பிடித்தமான பொருளாக கருதப்படுகிறது வில்வ இலை. பல வகையான வாசனை மிகுந்த மலர்களை படைப்பதை விட வில்வ இலையை நாம் சிவபெருமானுக்கு படைப்பதால் அவர் பல மடங்கு சந்தோஷம் அடைவார் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட இந்த வில்வ இலையை நாம் மூன்று இலைகள் கொண்ட காம்பு இருப்பது போல் படைக்க வேண்டும். வில்வ இலை வாடினாலும் அதன் மகத்துவம் குறையாது என்பதால் ஒருமுறை படைத்த அதே வில்வ இலையை மறுநாளும் நாம் படைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. படைப்பதற்கு முன்பாக அந்த இலையை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு படைக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும்.
சிவபெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தேன். சுத்தமான தேனை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைப்பதன் மூலம் நம்முடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் நீங்கி தூய மனம் பெறுவோம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் ஏற்படும். இந்த தேனை பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.
0
Leave a Reply