ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியா 5வது பதக்கம் வென்ற மனு பாகரை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மோடி
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியா நேற்று ஐந்தாவது பதக்கம்.2008ல் அபினவ் பிந்த்ரா (தங்கம், பீஜிங்), 2004 ல் ராஜ்யவர்தன் ரத்தோர் (வெள்ளி, ஏதென்ஸ்), 2012ல் விஜய் குமார் (வெள்ளி), ககன் நரங் (வெண்கலம், லண்டன்) பதக்கம் வென்றிருந்தனர்.2024 ல் வெண்கலம் மனு பாகர் பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெண் கலம் வென்ற மனு பாகருக்கு வாழ்த்துகள். இந்த பதக்கம் கூடுதல் ஸ்பெஷலானது. ஏனெனில், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்துள்ளார். இது வியக்கத்தக்கது, என பிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில் தெரிவித்துள்ளார். மனு பாகரை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மோடி
பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கிசுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா கூறுகையில்,"உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, கடின உழைப்பு, ஆர்வம் உள்ளிட்டவை உண்மையில் பலன் தந்துள்ளது. இந்த வெண்கலம் விடாமுயற்சிக்கு கிடைத்தது.தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்," என்றார்.
0
Leave a Reply