ரூ.17,000 தள்ளுபடி அறிவித்த முகேஷ் அம்பானி ஐபோன் ஆப்பிள் போனுக்கு..
செப்டம்பர் 9-ஆம் தேதி "இட்ஸ் குளோடைம்" (It's Glotime) என்ற நிகழ்ச்சியில் ஆப்பிளின் சமீபத்திய மாடலான "iPhone 16" சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த புதிய மாடலுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் முகேஷ் அம்பானி ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்துள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரனான முகேஷ் அம்பானி புதிய ஐபோன் சீரிஸ்க்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும்போது ஐபோன்15 ப்ரோ மேக்ஸ் மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் தள்ளுபடியை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், "iPhone 15 Pro Max" விலையைக் குறைத்துள்ளது. முதலில் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடல் ரூ. 1,54,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 1,37,000 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.இந்த ரூ.17,000 தள்ளுபடி, ஆப்பிளின் சமீபத்திய வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வந்துள்ளது. இந்த சலுகையோடு மட்டுமில்லாமல் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக ரூ.5000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். அதேபோலAU பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள்6000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த சலுகைகளின் மூலம்17,000 தள்ளுபடியுடன்"iPhone15ProMax" மாடலின் மொத்த சேமிப்பு ரூ.22,000 முதல் ரூ.23,000 ரூபாய் வரை இருக்கும். ஆப்பிளின் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனான"iPhone15ProMax" மாடல் ஸ்ட்ராங்கான டைட்டானியம் பாடியை கொண்டுள்ளது.6.7in சூப்பர் ரெட்டினாXDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியையும் கொண்டுள்ளது. இதனால் தண்ணீரில் விழுந்தாலும் போனுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அத்தகைய உயர்தர மாடலில் விலை குறைப்பு தற்போது iphone பிரியர்களுக்கு வசதியான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த தள்ளுபடி, அம்பானியின் வணிக உத்தியா அல்லது புதியiPhone வெளியீட்டிற்கு முன் தனது தயாரிப்புகளை விற்கும் முயற்சியா என்பது குறித்த கேள்வி எழுகிறது. ஆனாலும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் வழங்கப்படும் இந்த தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கிடைக்கக்கூடிய தள்ளுபடி அனைத்தும் சேர்த்து பார்க்கும் போது தோராயமாக 23,000 ரூபாய் வரை "iPhone 15 Pro Max" போன்களில் சேமிக்க முடியும்.
0
Leave a Reply