பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா, 13 ஆகஸ்ட் 2024.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜீலை 26-ல் துவங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10,714, பேர் பங்கேற்றனர். நிறைவு விழாவை 80,000 ரசிகர்கள் கண்டு களித்தனர்.இந்தியா சார்பில் வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தனர். உலகின் சிறந்த இசை கலைஞர்களின் ஆடல், பாடல், சர்க்கஸ் கலைஞர்களின் வித்தை, பாலே நடனம் இடம் பெற்றன..
மிஷன் இம்பாசிபிள் புகழ் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டாம் குருஸ் மிரட்டினார். 62 வயதான இவர் துடிப்பான இளைஞர் போல சாகசம் நிகழ்த்தினார். 'ஸ்டேட் டி பிரான்ஸ்' மைதான மேற்கூரையில் தோன்றினார்.160 அடி உயரத்தில் இருந்து கயிறு கட்டியவாறு, நிறைவு விழா மேடைக்கு துல்லியமாக குதித்தார். இவரை பாத்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனா பைல்சிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்றார்.பாரிசின் 'ஸ்டேட்டி பிரான்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடந்தன. வானவேடிக்கையில் மைதானம்.ஜொலித்தது
பாரிசில் ஒலிம்பிக் போட்டிக்கான நிறைவு விழா நடந்தது. கிராமி விருது வென்ற கேப்ரியலா சர்மியன்டோ வில்சன் (எச்.இ.ஆர்) அமெரிக்க தேசிய கீதத்தை பாடினார்.லாஸ் ஏஞ்சல்சில் 2028-ல் ஒலிம்பிக் நடக்கவுள்ளது. இதற்கான கொடியை லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்சியம் வழங்கினார்.
0
Leave a Reply