வீட்டில் பூஜை அறை
வீட்டில் பூஜை செய்பவர்கள் கட்டாயம் பூஜை, அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் தூசுகள் நிறைந்துள்ள இடங்களில் தெய்வங்கள் வசிப்பதில்லை. குறிப்பாக மகாலட்சுமிக்கு பதிலாக அங்கு துர்தேவதைகள் வாசம் செய்யும். எனவே பூஜை அறையை சுத்தமாக வைத்திருந்து அதில் பஞ்சபூதங்கள் இடம் பெற்றிருக்குமாறு பூஜை செய்ய வேண்டும்.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய இந்த ஐந்து பஞ்சபூதங்களும் பூஜை அறையில் கண்டிப்பாக இருப்பது அவசியமாகும். நிலம், ஆகாயம், காற்று ஆகிய மூன்று பூதங்களும், நீக்கமற நிறைந்துள்ளன. நிலத்தில் தான் பூஜை அறை அமைய பெற்றிருக்கிறது. ஆகாய மார்க்கமாகத்தான் பூஜை பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும்.காற்று எங்கும் காணப்படுகிறது. பூஜை அறை திறந்த நிலையில் இருக்க வேண்டும். மீதமிருக்கும் இரண்டு பூதங்கள் ரொம்பவும் அவசியமாகும். நெருப்பு மற்றும் நீர் பிரதானமாக வைத்து பூஜையை துவங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
விளக்கு ஏற்று வதால் உண்டாகக்கூடிய ஜோதியில் தான் இறைவன் ஆவாகனம் ஆகிறார். நாம் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நீர் வழியாகத்தான் ஆவாகனம் ஆகிறது. எனவே இவ்விரண்டு பூதங்களும் அன்றி நாம் பூஜையை துவங்கக்கூடாது. விளக்கு ஏற்றி, சூடம் காண்பிக்கும் போது ஒளிரும் ஜோதியில், இறைவனை நாம் காண வேண்டும். இறைவனுடைய திருப்பாதங்களில் இருந்து திருமேனி தரிசிக்க வேண்டும். இவ்வாறு தான் கண்ணுக்கு தெரியாத இறைவன், நம். மனதில் தோன்றுகிறார்.
0
Leave a Reply