முள்ளங்கி. காலிஃபிளவர் போன்றவற்றின்இலைகளை பொடியாக நறுக்கி பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும்
முள்ளங்கி. காலிஃபிளவர் போன்றவற்றின்இலைகளை பொடியாக நறுக்கி பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும் அல்லது சூப்தயாரித்து சாப்பிடலாம்
காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.
பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.
மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால். அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றி விட்டு பிளேடு சுழற்றினால் எளிதில் கழற்றலாம்.
தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளறி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்
0
Leave a Reply