மாதம் ரூ.5000 போதும்...5.22 கோடிக்கு அதிபதி..
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கடந்த சில காலங்களாகவே லாபத்தை அள்ளிக்கொடுத்து வருகின்றன. இந்திய பங்குச் சந்தையும் தொடர் ஏற்றத்துடன், புது உச்சங்களை தொட்டு வருவதாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீதான ஆர்வம் மக்களிடையே பெருகி வருவதாலும் இனி வரும் காலங்களில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்SIP இல் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் நீண்டகாலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் பணம் சேர்ப்பது சாத்தியமே..நீண்ட காலSIPகளின்15ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில்15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்க்கலாம்.இதில் முதலீட்டாளர்கள் தங்கள் வட்டிக்கு வட்டி பெறுகிறார்கள் என்று பண வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் 15 சதவீத வருடாந்திர SIP ஸ்டெப்-அப் (Step -UP) விகிதத்தை பராமரிப்பது முக்கியம். உதாரணமாக, நீங்கள் மாதந்தோறும் ரூ. 5,000 எனSIP இல் பணத்தை முதலீடு செய்ய தொடங்குவதன் மூலமும்,15 சதவீத வருடாந்திரSIP ஸ்டெப்அப் மூலம் முதலீட்டை தொடர்ந்து கூட்டுவதன் மூலமும், 15 சதவீத வருடாந்திர மியூச்சுவல் ஃபண்ட் வருவாயையும் சேர்த்து, முதலீட்டாளர்கள் 25 ஆண்டுகளில் சுமார் ரூ. 5.22 கோடியை குவிக்க முடியும்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
0
Leave a Reply